சீன தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகள் தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட வயது முதியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆம் தடுப்பூசியை விரைவில் செலுத்த விசேட ஆலோசனைக்கு குழு கோரிக்கை விடுத்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் இன்று அல்லது நாளை ஆய்வுகளின் முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.