இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
புத்தல பிரதேச செயலாளர் பிரிவின் பல கிராமங்களில் சனிக்கிழமை (11) நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (12) நிலநடுக்கம் ஏற்படவில்லை என்று மொனராகலை அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எச்.ரவீந்திர குமார தெரிவித்தார்.
உனவடுன, ஊவா-பல்வத்த, யுத்கனாவ, வகுருவெல ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக புத்தல பிரதேச செயலாளர் ஆர்.எம்.எஸ்.திலகரத்ன தெரிவித்தார்.
குடியிருப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது மேற்கூரையும் கூரையும் அதிர்ந்ததாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். பெப்ரவரி 10ஆம் மதியம் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், பல வீடுகள் (தற்காலிக வீடுகள்) விரிசல் அடைந்தன. உனவடுன புத்தலோக பிரிவேனா சைத்தியத்தின் சூடாமாணிக்கம் தரையில் வீழ்ந்ததாக உடவெல சுமணரதனஹிமி தெரிவித்தார்.
இந்நிலையில் சுரங்க மற்றும் அகழ்வு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று வந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எச்.ரவீந்திர குமார தெரிவித்தார்.
ஞாயிறுக்கிழமை (12) நிலநடுக்கம் ஏற்பட்டதாக சிலர் கூறினாலும், அவ்வாறு எவ்விதமான நடுக்கமும் ஏற்படவில்லை என்றும், பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.