இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!
இந்தியா - புதுடெல்லிக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொடவ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகாக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
சேனுகா செனவிரத்ன தற்போது ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக சேனுகா செனவிரத்ன பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் அவர் முன்பு வெளிவிவகார செயலாளராக பணியாற்றியதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர் ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.