வெளியானது புதிய சுகாதார வழிக்காட்டல்கள்!
ஊரடங்கு சட்டம் நாளையுடன் நீக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம் இருப்பவை: நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்களுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது.
பொது போக்குவரத்துக்களில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அனுமதிப்பட வேண்டும்.
மேலும் மறு அறிவித்தல் வரும் வரை பொது கூட்டங்கள் எதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அத்தியாவசிய பொருட் கொள்வனவு மற்றும் தொழில், சுகாதார தேவை தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் மாத்திரமே மக்கள் வீடுகளிலிருந்து வெளியில் செல்ல முடியும்.
இம்மாதம் 15 ஆம் திகதி வரை விற்பனை நிலையங்களுக்கு 10 வீதமானோரும் , 15 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 20 சதவீதமானோரும் அனுமதிக்கப்படலாம்.
இதேவேளை முன்னரே அனுமதி பெற்று ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மாத்திரம் வாடிக்கையாளர்களை சிகை அலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும் ஆரம்ப பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்படலாம். மட்டும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலை முற்கட்டமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இம்மாதம் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கு மாத்திரமே பதிவு திருமணங்களில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும். 15 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை மண்டபமொன்றில் மொத்தமாகக 50 பேர் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும்.
இம்மாதம் 15 ஆம் திகதி வரை மரண சடங்கு நிகழ்வுகளில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் 15 - 31 ஆம் திகதி வரை 15 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.