உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய வர்த்தமானி அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் இழுத்தடிப்பு
நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந்த 9ஆம் திகதி இடம்பெறவிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தேர்தலுக்கான தினம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.