இலங்கை மத்திய வங்கியின் புதிய நிர்வாக சபை!
இலங்கை மத்திய வங்கியின் புதிதாக நிறுவப்பட்ட ஆளும் சபை அண்மையில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளுக்கமைய (21.09.2023) ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் சபை அறையில் நடைபெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நிர்வாக சபையின் தலைவராகவும், ஜனாதிபதி சட்டத்தரணி முன்னர் நாணயச் சபையின் உறுப்பினராகவும் இருந்த திரு சஞ்சீவ ஜணவர்த்தன, முன்பு நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த திரு. நிஹால் பொன்சேகா, டாக்டர் ரவி ரத்நாயக்க, மற்றும் திரு. அனுஷ்கா விஜேசிங்க ஆகியோர் உள்ளடங்களாக நிர்வாக சபைக் கூட்டம் இடம்பெற்றதாக தகவலறியப்பட்டுள்ளது.
சஞ்சீவ ஜயவர்தன பி.சி., திரு. நிஹால் பொன்சேகா, கலாநிதி ரவி ரத்நாயக்க மற்றும் திரு. அனுஷ்கா விஜேசிங்க ஆகியோரை ஆளுநர் வீரசிங்க வரவேற்றார்.
புதிதாக அமைக்கப்பட்ட ஆளும் குழுவின் இந்த உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் புதிதாக நிறுவப்பட்ட நாணயக் கொள்கை வாரியத்தின் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.