வடக்கு கல்விப் பணிப்பாளராக கிழக்கைச் சேர்ந்தவர் நியமனம்
அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர். எதிர்வரும் (21) திங்கட்கிழமை வடமாகாண கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதவி உயர்வு
வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய வேளை இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் , தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போதிலும் சிரேஷ்ட நிலையில் இருந்ததால், வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.