கொழும்பு பெண் மருத்துவர் தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
அதேவேளை வைத்தியர் மகேஷி விஜேரத்னவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி , மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.