போராட்டத்தால் பற்றி எரியும் நேபாளம்; விமான நிலையம் மூடல்
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது .
நாட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து நேபாள அரசின் பிரதமர் கே.பி.ஷர்மா சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார்.
நேபாள பிரதமர் இராஜினாமா
சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை ஆர்ப்பாட்டக்காரர்களில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நேபாள ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள், பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தீ வைத்தனர்.
இதனால், பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைக்கப்பட்டதால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.