நீர்கொழும்பில் பரபரப்பு: இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுப்பு!
நீர்கொழும்பு பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குடபடுவ பகுதியில் மீட்கப்பட்ட சடலம் 65 வயதுடைய நபருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபர் 4 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 75 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் 4 அடி மற்றும் 5 அங்குல உயரம் கொண்டவர் என நம்பப்படுவதாகவும், கடைசியாக வெள்ளை நிற சாரம் மற்றும் வெள்ளை நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.