புத்தளம் தடாகத்தில் இருந்து தங்கம் பொதியை மீட்ட கடற்படையினர்!
இலங்கை கடற்படையினர் பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் புத்தளம் தடாகத்தின் ஆழத்தில் இருந்து 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பொதி ஒன்றை மீட்டுள்ளனர்.
நேற்று (08-12-2023) குறித்த விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கத்தை நீருக்கடியில் மூழ்கடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையில் SLNS விஜயாவால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி படகுகள் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்காவில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.