நவராத்திரி ஐந்தாம் நாளில் வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபடவும், வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் அனைத்தையும் பெறுவதற்கும் உரிய காலமாக நவராத்திரி காலம் சொல்லப்படுகிறது. அதனால் தான் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் கடைபிடித்து, அம்பிகையை பலவிதங்களில் வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை வழிபாட்டிற்குரியவையாகும். இதை தொடர்ந்து வரும் அடுத்த மூன்று நாட்களும் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும்.
வெள்ளை நிறம் (வெண்மை) தூய்மை, அமைதி மற்றும் தவறு செய்யக் கூடாது என்ற குணம், ஆகியவற்றைக் ஒத்ததாக இருக்கிறது.
திங்கட்கிழமை அன்று வெண்ணிற ஆடைகளை அணிந்து, பராசக்தியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதன் மூலம், மன உளைச்சல், குழப்பம், சஞ்சலமான மனம், ஆகியவை நீங்கி, மனம் அமைதி பெறும் மற்றும் பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.
மகாலட்சுமியின் அருளை பெற்றவர்களுக்கு பெருமாளின் அருளும் தானாக கிடைத்து விடும். பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் மகாலட்சுமியையும், பெருமாளையும் சேர்த்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அஷ்டலட்சுமிகளில் எந்த லட்சுமியின் வடிவத்தையும் நாம் வழிபடலாம். ஆனால் தைரிய லட்சுமியை வழிபட்டால், தைரிய லட்சுமி இருக்கும் இடத்திற்கு மற்ற அனைத்து லட்சுமிகளும் அழைக்காமலே வந்து விடுவார்கள் என்பது ஐதீகம். எந்த இடத்தில் தைரிய லட்சுமி நிரந்தரமாக குடியிருக்கிறாளோ அந்த இடத்தில் அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்.
நவராத்திரி 4ம் நாள் வழிபாட்டு முறை
அம்மனின் வடிவம் மகாலட்சுமி கோலத்தில் காட்சித்தருவதால் படிக்கட்டு வகை கோலம் போட்டு ஜாதிமல்லி மலர் வைத்து நைவேத்தியமாக கதம்ப சாதம் சுண்டல் - பட்டாணி சுண்டல் பழம் - கொய்யா பழம் ஆகிவற்றை படைத்து வழிப்பாட்டால் சிறப்பான பலன் பெறலாம்.
மகாலட்சுமி வழிபாடு
நவராத்திரியின் 4ம் நாளில் மகாலட்சுமிக்கு கருநீல நிறத்தில் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். நாமும் அதே நிறத்தில் ஆடை உடுத்தி வழிபடுவது சிறப்பு. மேலே குறிப்பிட்ட பொருட்களின் எது கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்படாமல், கிடைக்கும் மலர்கள், பொருட்களை கொண்டு மகாலட்சுமியை வழிபடலாம். என்ன பொருள் கொண்டு வழிபட்டாலும் நம்முடைய வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு அருள் செய்வாள். மிக எளிமையாக துளசி இலை, கற்கண்டு மட்டும் படைத்து கூட வழிபட்டாலும் மகாலட்சுமி மனம் மகிழ்வாள்.
நவதுர்க்கை வழிபாடு
துர்க்கை வடிவம் - கூஷ்மாண்டா தேவி மலர் - வெள்ளை நிற மலர்கள் நைவேத்தியம் - தயிர், பால் கூஷ்மாண்டா தேவியை வழிபட்ட பிறகு சிவ பெருமானையும், பிரம்ம தேவரையும் வழிபட வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. இவள் ஆரோக்கியம், மன அமைதி, வாழழ்க்கையில் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை தரக் கூடிய தேவி. இவளுகஅக பூசணிக்காய் படைத்து வழிபடும் பழக்கம் பலரிடமும் உண்டு. இவள் தர்மத்தையும், நீதியையும் வழங்கக் கூடியவள். இதனால் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி வைப்பாள்.