கொலஸ்ட்ராலை கொல்லும் இயற்கை வழிகள்!
இளைய தலைமுறையினரிடையே மாறிவரும் வாழ்க்கை முறையால் பலர் அதிக உடல் பருமன் ஏற்ப்பட்டு கொலஸ்ட்ரால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மாத்திரை எடுக்காது இயற்கையான வழியில் இந்த கொலஸ்ட்ராலை குறைக்கமுடியும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் இயற்கை வழிகள்
அதற்கு நாம் முழு தானிய வகைகளை எடுத்துக்கொள்ளலாம் ,
அதோடு சில வகை மீன்களில் ஒமேகா 3 இருப்பதால இந்த மீன் அடிக்கடி சாப்பிடலாம் ,

உலர் விதைகள்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பாதாம் பருப்பு, கடுக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் டீ
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க கிரீன் டீ எடுத்து கொள்ளலாம்.

குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தயிர்,எடுத்துக்கொள்ளலாம் .
ஸ்மூத்தி
குளிர்ந்த நீர் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் அல்லது ப்ளூபெர்ரிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதை அரைத்து ஆரோக்கியமான ஸ்மூத்தியாக குடித்து வர கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
