சளி, இருமலை வீட்டிலேயே குணமாக உதவும் இயற்கை டிப்ஸ்
மழைக்கொட்டித் தீர்க்கும் இந்த காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் சளி, இருமல் போன்றவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் பாடாய் படுத்து வருகின்றது.

அதனை சரிசெய்ய பலரும் பல மருந்துகளை பயன்படுத்தி சரியாக வில்லையாக அப்போ கட்டாணம் இந்த இயற்கை வழிகளை உபயோகித்து பாருங்கள். அதுவும் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சளி, இருமலில் இருந்து விடுபட கை வைத்தியங்களைத் தான் மேற்கொண்டார்கள். அதை பற்றி நாம் இங்கு பார்க்கப்போம்.

தேன் மற்றும் இஞ்சி
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் தான் தேன் மற்றும் இஞ்சி. இவ்விரண்டுமே நம் முன்னோர்களால் சளி, இருமலின் போது பழங்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவைகளாகும். இதில் இஞ்சி சளியை இறுக்கமடையச் செய்கிறது மற்றும் தொண்டை எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் தேன் தொண்டை வலியைப் போக்குகிறது. எனவே இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, இருமல் மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் இப்படி தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.

ஆவி பிடிப்பது
குளிர்ச்சியான காலத்தில் கடுமையான மூக்கடைப்பு, நெஞ்சு நெரிசல் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து, அந்நீரை 10 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூலிகை டீ
நல்ல குளிர்ச்சியான காலத்தில், அதுவும் மழை நேரத்தில் நல்ல சூடான மூலிகை டீயை தயாரித்து குடித்து வந்தால், அது உடலுக்கு இதமாக இருப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதுவும் துளசி, பட்டை, மஞ்சள் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து தினமும் இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், சளி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
