சொத்துக்கள் அரசுடமையாக்கலும், இலங்கையின் வீழ்ச்சி பற்றிய ஒரு பதவி!
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (Sirimavo Bandaranaike) அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 1970களின் முற்பகுதியில் இலங்கையில் சொத்து தேசியமயமாக்கல் தொடங்கியது.
1972 இல், அரசாங்கம் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, இது நாட்டில் பெரும்பாலான தனியாருக்குச் சொந்தமான நிலங்களை தேசியமயமாக்கியது.
இதைத் தொடர்ந்து 1972 இல் வங்கி, காப்பீடு மற்றும் பெற்றோலியம் போன்ற முக்கிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டது.
மேலும் 1975 இல் நாட்டின் தேயிலை மற்றும் ரப்பர் தொழிலில் உள்ள அனைத்து வெளிநாட்டு சொத்துக்களும் மொத்தமாக தேசியமயமாக்கப்பட்டது.
இந்த கொள்கைகள் ஒரு பெரிய சோசலிச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தன.
பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்துவதிலும் மாற்றத்தை கொண்டு வரும் என அன்றைய ஶ்ரீமாவோ தலைமையில் இணைந்திருந்த என்.எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் நம்பினர்.
அதன் பின்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி விழத் தொடங்கியது. சில விடயங்கள் பேசும் போது அருமையாகவும், நலன் போலவும் இருந்தாலும் அத்தனையும் வீழ்ச்சியை நோக்கியே செல்ல ஆரம்பித்தது.
இலவசம் என்பதை அறிமுகப்படுத்தியோரும் இவர்கள்தான். இதனால் சோம்பேறிகளாக மக்கள் மாறினர். சந்திர மண்டலம் சென்றாவது 2 கொத்து அரசி கொண்டு வந்து தருவோம் என்பது தேர்தல் கோசமானது. மக்கள் ஓசியில் சாப்பிட ஆசைப்பட்டு வாக்களித்து, அவர்களை வெற்றி பெற வைத்தனர்.
1972 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி இலங்கையில் இருந்த ரணிலின் உறவினர்களுக்கு சொந்தமான லேக்ஹவுஸ் உட்பட தனியார் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டன.
இக்காலத்தில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் இலங்கை அரசாங்கம் காணி சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனியார் நில உடைமைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ நில உரிமை முறையை ஒழித்தது.
இந்த சட்டத்தின் நோக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்வதும், நாட்டில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதும் ஆகும். இந்தச் சட்டத்தின் விளைவாக, லேக்ஹவுஸ் உட்பட பல பெரிய சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
லேக்ஹவுஸ் அரசுடமையாக்கத்துக்கு பின்னால் வேறோர் கதை உள்ளது. ஶ்ரீமாவோவின் மகளான சந்திரிகாவை , ரணிலுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. விஜேவர்தன மற்றும் ரத்வத்தை குடும்ப உறவினர்கள். அது தடைபட்டு போக , அந்த கோபத்தில் ஶ்ரீமாவோ லேக்ஹவுஸ் பத்திரிகையை அரசுடமையாக்கி பழி வாங்கினார்.
விஜேவர்தன, தனது கராஜில் 1986ல் தொடங்கியதுதான் ஞாயிறு லங்காதீப by Wijeya Newspapers Limited. இது ரணிலின் மாமா குடும்பத்தினருடையது. Sunday Times (1987), Lankadeepa (1991) and Midweek Mirror (1995)
பணக்காரர்களது காணிகள் 50 ஏக்கருக்கு மேல் இருந்தால் , அவற்றை பறித்து அரசுடமையாக்கி காணியற்றோருக்கும் , இளையோருக்கும் விவசாயம் செய்ய கொடுத்தது. ஆனால் அந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வந்தர்களது காணிகளை பினாமிகள் பெயரில் எழுதி வைத்து விட்டே சட்டத்தை கொண்டு வந்தனர்.
வெறுமனே இருந்தோருக்கு காணிகள் கிடைத்த போது , அவர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. விவசாயத்துக்காக கொடுத்த வங்கி கடன்களைக் கூட தவறாகவே பயன்படுத்தினர். எனக்கு தெரிந்த சிலர் அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள்கள் வாங்கினர்.
சில காணிகளை நிர்வகிக்க இளைஞர் படையொன்றை நிர்மானித்தனர். அவை எதுவும் இன்று இல்லை.
இக் காலத்தில் என்.எம். பெரேரா , பதுக்கி வைத்திருக்கும் நோட்டுகளை வெளியே எடுக்கவென 100 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கினார். அதிலும் அநேகர் மக்களிடம் தங்களது நோட்டுகளை கொடுத்து வங்கிகளில் மாற்றிக் கொண்டனர். நாசமானதும் உண்மை.
அதையடுத்து JR அட்ட அட்டக் (8 தானியங்கள்) தருவோம் என ஆட்சியை பிடித்தார். அவர்களும் இந்த காணிகளுக்கு இளைஞர் படையொன்றை உருவாக்கி ஏதோ ஒரு பெயர் (நினைவில் இல்லை) வைத்து இளம் விவசாயிகளை ஊக்குவிப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அதற்கு என்ன ஆனது என தெரியவில்லை. எனக்கு தெரிய, அரச விவசாய பண்ணை போல இருந்த பெயரே அந்த இடங்களில் இல்லை. தனியார் சொத்துகளை அரசுடமையாக்கி , அந்த சொத்துகள் மேல் ஆர்வமே இல்லாதோரால் அவை ஏதேதோ ஆகின. இதனால் அந்த தோட்ட வருமானங்கள் இல்லாமல் போயின.
JR, வந்து ஶ்ரீமாவோவின் குடியுரிமையை இரத்து செய்து, அரசியலே செய்ய விடாது பண்ணினார். இப்படியான ஆரம்ப சறுக்கல்தான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படை என முகநூலில் குறித்த பதிவை ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.