தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுகள் இம்முறை இங்குதான் இடம்பெறும்!
தேசிய வெசாக் பண்டிகையை நிகழ்வுகளை இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி நயினாதீவு நாகவிகாரையில் முன்னெடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசன , கலைகலாச்சார அலுவல்கள் அமைப்பின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச பொசன் பண்டிகை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 65 பௌத்த விகாரைகள்,35 பிரிவெனா பாடசாலைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை அரச பொசன் பண்டிகையை சுகாதார பாதுகாப்பு வழிமுறைக்கு அமைய சிறப்பாக கொண்டாட எதிர்பார்கக்ப்பட்டுள்ளது.
அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வு திட்டமிடல் மற்றும் ஒழுங்குப்படுத்தலில் புத்தசாசனம், மத கலைகலாசார அமைச்சின் கீழ் உள்ள இந்து , கிருஷ்தவம் மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களம் ஒன்றினையவுள்ளன.