பகிடிவதைகளை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்; அமைச்சர் அதிரடி!
பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய தீர்வு ஒன்றுக்காக அடுத்துவரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். எந்தவொரு தரப்பினரையும் இலக்காக கொண்டு செயற்படுவது எமது நோக்கமல்ல.
அவ்வாறு செய்ய முடியாது. பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடிய நிலையங்களாக இருக்கவேண்டும்.
இதனை சீர்குலைக்கும் தரப்பினர் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் அவற்றுக்கெதிராக தேசிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் எச்சரிக்கை விடுத்தார்.