சற்றுமுன் இலங்கையை வந்தடைந்த நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
இந்த நிலையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.