நானுஓயா கோரவிபத்து ; ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!(Photos)
நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் எம்ஐ 17 ரக ஹெலிகொப்டரை ரத்மலானை விமானப்படை தளத்தில் விமானப்படை தயார் செய்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
பேருந்து , வேன் ,முச்சக்கர வண்டி விபத்து
நானுஓயா – ரதல்ல பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் முச்சக்ககர வண்டியொன்றும் மோதி விபத்துள்ளாகினதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 53 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் , முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்த கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த 53 மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .
இவர்களில் காயங்களிற்கு உள்ளானவர்களை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வருவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நானுஓயா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.