பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரெனெ வெளியேறிய நமீதா....காரணம் என்ன?
தமிழில் தனியார் தொலைக்காட்சியின் மிகவும் பிரபல நிகழ்ச்சியென்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் கடந்த 3ம் திகதியன்று தொடங்கியது. இதில் முதல் முறையாக திருநங்கைப் போட்டியாளராக நமீதா மாரிமுத்து என்பவர் பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில்.
18 போட்டியாளர்களின் ஒருவரான நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். திடீரென உடல்நிலை குறைபாடு காரணமாக அவரது விருப்பத்தின் பெயரில் தான் அவர் வெளியேறியதாகவும். அவரது வெளியேற்றத்துக்கும் தொலைக்காட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென தகவல் வெளியாகியுள்ளன.
உடல் நிலை பாதிக்கப்பட்ட நமீதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரது வெளியேற்றத்துக்கு உடல் நிலை தான் காரணமா அல்லது வேறெதுவும் காரணங்கள் உள்ளதா என்பது போக போகத்தான் தெரியும்.