அஸ்கிரிய பீட மகாநாயக்கா்களை சந்தித்த நாமல்
பொது ஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் குழுவினர் மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கா்களையும் அணுநாயக்கர்களையும் சந்தித்தனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், சியம் மகா நிக்காயாவின் அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரகாகொட ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்கத் தேரர் வண.வேண்டறுவே உபாலி, வண. நாரம்பனாவே ஆணந்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் சியம் மகா நிக்காயாவின் மல்வத்தை பிரிவின் மகா நாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்தி ஶ்ரீ சுமங்கல அவர்களை சந்தித்தனர். இதன்போது நாமல் ராஜபக்சவுக்கு வண. தேரரினால் புத்தரின் புனித உருவச் சிலை ஒன்றையும்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகர காரியவசம், சஞ்ஜீவ எதிரிமான, சீ.பீ.ரத்நாயக்கா, முன்னால் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் மகிந்த அபேகோன் உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.