சிஐடியில் முன்னிலையாகுமாறு நாமல், ஷிராந்திக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கடந்த 27 ஆம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தனிப்பட்ட காரணத்தினால் தன்னால் குறிப்பிட்ட திகதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக முடியாது எனவும் தனக்கு கால அவகாசம் தேவையெனவும் ஷிராந்தி ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.