இரு புதிய அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு நாமல் பதிவிட்ட டுவிட்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நேற்றைய தினம் ஹரின் பொர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார உட்பட பலர் அமைச்சரகளாக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவர்களின் பெயரை குறிப்பிட்டு நாமல் ஒரு டுவிட்டை வெளியிட்டுள்ளார்.
நமலில் அந்த டுவிட்டர் பதிவில், ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ் நாணயக்கார நாம் எப்பொழுதும் அரசியலில் எதிர் கருத்துக்களைக் கொண்டுள்ளோம், நாம் அதைத் தொடர்வோம் என்று நான் நம்புகிறேன்.
.@fernandoharin & @nanayakkara77 we have always had opposing political views & I believe we will continue to.However it is commendable that u both chose to come together & serve our country & our people during these difficult times!Looking fwd to working together for a change??
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 20, 2022
இருப்பினும் இந்த இக்கட்டான காலங்களில் நீங்கள் இருவரும் ஒன்றிணைந்து நமது நாட்டிற்கும் நமது மக்களுக்கும் சேவை செய்ய தேர்ந்தெடுத்தது பாராட்டத்தக்கது!
நாட்டின் மாற்றத்திற்காக ஒன்றாகச் செயல்பட விரும்புகிறேன். என இவ்வாறு நாமல் கூறியுள்ளார்.