நாமல் ராஜபக்சவால் பவித்ராவுக்கு தலையிடி!
இலங்கையில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
நெருக்கடியில் அமைச்சர்கள்
அந்தவகையில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க ஐஅமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, தேனுக விதானகமகே, இந்திக அனுருத்த ஆகியோர் தொடர்ந்தும் தமது அமைச்சுப் பதவியை தொடர்வதா அல்லது நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியில் அமர்வதா என்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
அதேவேளை பவித்ரா வன்னியாராச்சி மற்றும் தேனுக விதானகமகே ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலுக்கு ஆதரவு
வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் பவித்திரா வன்னியாராச்சி எந்தவித தீர்மானத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையில் , வியாழக்கிழமை (08) அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.