மறுத்தார் தம்மிக்க; ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ; உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பின்வாங்கிய தம்மிக்க
அதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக என்னைப் போட்டியிட பரிந்துரைத்த கட்சித் தலைமைக்கும், உங்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தம்மிக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது..