அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தனின் தங்கரத திருவிழா; மெய்மறந்த பக்தர்கள்!
வரலாறு பிரசித்தி பெற்ற யழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21 ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்று (29) மாலை சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து, தொடர்ந்து தங்கரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்த நிலையில் பகதர்கள் கந்தபெருமானின் அழகைக்கண்டு மெய்மறந்து நின்றனர்.
அடியார்களுக்கு அருட்காட்சி- மாலை ஒரு முகதிருவிழா
அந்தவகையில் இன்று காலை தெண்டாயுதபாணி உற்சவமும் , மாலை ஒரு முகதிருவிழா இடம்பெறவுள்ளது.
வெகுசிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நல்லூர் கந்தனின் தேர் திருவிழா நாளைமறுதினம் ஞாயிற்ற்கு கிழமை இடம்பெறவுள்ளதுடன், தீர்த்த திருவிழா திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தனின் திருவிழாவையொட்டி பெருமளவு புலம்பெயர் தமிழர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.