ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்தார் நல்லூர் கந்தன்!
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி வருடாந்த மகோற்சம்பவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் 22 ஆம் நாளான இன்று காலை தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை ஒருமுகத் திருவிழாக சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதேசமயம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகா ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க, ராஜ குலதிலக, ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி நாடாளும் நாயகன் என தொடங்கும் கந்தனுக்கான கட்டியத்தை நல்லூர் விஷ்வப் பிரசன்ன சிவாச்சாரியார் கூறியபோது கூடியிருந்த பக்தர்கள் கூட்டம் பரவசமடைந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்கார கந்தனாம் நல்லூரானை கண்டு களித்தனர். அதேவேளை வரும் ஞாயிறுக்கிழமை நல்லூர் கந்தனின் தேர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.