தமிழகம் -யாழ்ப்பாணம் இடையே கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்! மக்கள் மகிழ்ச்சி
யாழ். காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை கப்பல் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு
இந்நிலையில் விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளதாகவும் அத்துடன் பயணச்சீட்டின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
150 பயணிகள் இந்தப் படகில் பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செவ்ல முடியும்.விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளது.
இந்த கப்பல் சேவை வாரம் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.