நெடுந்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்!
ஒரு நாள் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (18-03-2022) நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
அமலதாஸ் டேம்ஸ்யான்சிகா என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (17-03-2022) இரவு காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.