திருக்கோணேஷ்வரர் ஆலயத்தில் தொடரும் மர்மம் ; சர்வதேச ரீதியில் இயங்கும் சதிக் குழு
திருகோணமலை திருக்கோணஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவம் வெளிநாடுகளில் இயங்கும் சதிக் குழுவுடன் தொடர்பு இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
இதனை தொடர்ந்து, தனக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமையவே தான் திருக்கோணேஸ்வரம் ஆலய திருட்டு சம்பவத்தில் தலையிட்டதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த கோயிலின் பூசகர் விடுமுறையில் இருப்பாரோ அன்று தான் அந்த திருட்டு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அம்மனின் தாலி காணமல் போயிருப்பினும் இது தொடர்பில் பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினரால் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனாலேயே அவர் தலையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் கூறியுள்ளதாவது,