ஹட்டன் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொதி!
ஹட்டனில் பஸ் நிலையத்தில் காணப்பட்ட மர்ம பை ஒன்றினால் அங்கு பெரும் பதற்றமான நிலைமை நிலவியது.
குறித்த பஸ் நிலையத்தில், மர்ம பொதி ஒன்று இருப்பதாகவும், அதனையடுத்து அங்கிருந்தவர்களை அவ்விடத்தை விட்டு உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஹட்டன் நகரத்துக்கு வரும் பஸ்களை நகரத்துக்குள் செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் இச்சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
இதேவேளை, பயணி ஒருவர் விட்டுச் சென்ற பொதி ஒன்றென பொலிஸார் கண்டறிந்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக அந்த பொதியை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹட்டன் நகரம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.