பிக்பாஸில் மிட் வீக் எவிக்ஷனில் திடீரென வெளியேறிய முக்கிய போட்டியாளர்!
தழிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களின் மாபெரும் வெற்றியை அடுத்து கடந்த வாரம் அக்டோபர் மாதம் சீசன் 6 கோலகலமாக தொடங்கியது.
இவ்வாறான நிலையில் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி முடிவடைய உள்ளது.
இதேவேளை, ஏற்கனவே போட்டியாளர்கள் கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இவ்வாறு இருக்கையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட் வீக் எவிக்ஷனை பிக்பாஸ் அறிவித்தார்.
குறித்த மிட் வீக் எவிக்ஷனில் ஒவ்வொரு போட்டியாளராக ஹைட்ராலிக் லிப்ட் மேல் நிற்க வேண்டும் என்றும், அது கீழே இறங்கி மேலே வரும்போது போட்டியாளர் இல்லை என்றால் அவர் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.
இதனையடுத்து மைனா நந்தினி ஹைட்ராலிக் லிப்டில் ஏறி கீழே இறங்கியதும், மேலே லிப்ட் வரும்போது மைனா நந்தினி வரவில்லை. இதை கட்ட சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பிக்பாஸ் மைனா நந்தினி வெளியேறிவிட்டதாக கூறியதும் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.