எனது சகோதரிக்கு ஆங்கிலம் தெரியாது; உயிரிழந்த சிறுமியின் சகோதரன் தகவல்
எனது சகோதரிக்கு ஆங்கிலம் தெரியாது என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த டயகம சிறுமியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி தரம் 7 வரைக்கும் தான் கல்வி கற்றதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் , எனக்குத் தெரிந்தவரை எனது சகோதரிக்கு ஆங்கிலம் எழுதத் தெரியாது என்றும் உயிரிழந்த சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்குத் தெரிந்தவரை ஏதாவது ஆங்கிலத்தைப் பார்த்து எழுதும் திறனே எனது சகோதரிக்கு இருந்தது என்றும் ஆங்கில எழுத்துக்களில் ஏதாவது எழுதக் கூடிய அளவுக்கு கல்வித் திறன் இருக்கவில்லை என்றும் டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/diagama-girl-who-died-main-source-of-entanglement-1627966474