தலைமுடி உதிர்வைத் தடுக்கும் முயல் ரத்த எண்ணெயின் இவ்வளவு நன்மைகளா?
ஆண், பெண் என எல்லோருக்கும் தற்போது முடி உதிர்வது என்பது பெரும்பாலும் உள்ள பிரச்சினையாகும். முடி உதிர்விற்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது முயல் ரத்த எண்ணெய் பற்றிய பரவலாக பேசப்பட்டு வருகின்றது, முயல் ரத்த எண்ணெயின் என்னென்ன நன்மைகள் என நாம் இங்கு பார்ப்போம்.
இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதனால், கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்யப்படுவதோடு கண்களின் திறனை மேம்படுத்தப்படுகின்றது. இந்த எண்ணெய் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் சூட்டினால் முடி உதிர்வது குறையும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான,லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ளதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
முயல் இரத்தம் எண்ணெயானது பொடுகு பிரச்சனையை சரி செய்வதால் முடி உதிர்வு பிரச்சினை நீங்குகின்றது. நரை முடியை பிரச்சனை முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதால் முடியின் வேர்க்கால்களை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
முடியின் நுனிப்பகுதி உடைந்து போவதையும் தடுக்கிறது. முயல் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை அப்பளை செய்வதன் மூலம் முடி பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
முடி உதிர்விற்கு முடி வளர்ச்சிக்கு என இரசாயனம் கலந்த பொருட்களை பாவிப்பதை நிறுத்தி இயற்கையான பொருட்களை பாவிப்பதன் மூலம் முடி வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.