வயல் வெளியில் மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்!
மூதூர் – தோப்பூர் இக்பால் நகர் பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை (24-03-2022) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
தோப்பூர் – இக்பால் நகல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், வயல் வெளியில் வெடிக்காத நிலையில் மிதிவெடி கிடப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மிதிவெடியானது தற்போது அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூதூர் நீதிவான் நீதிமன்றின் அனுமதியைப்பெற்று விசேட அதிரடிப்படையின் மூலமாக செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.