மாணவியை தாக்கிய சங்கீத ஆசிரியைக்கு சிக்கல்; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!
கரந்தெனிய, திவித்துரவத்த தமிழ்ப் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் 12 மாணவர்களை பெண் ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதில் மாணவி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை எல்பிட்டிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடவேளையில் வகுப்புக்கு செல்லாத ஆசிரியை
சங்கீத ஆசிரியை பாடவேளையில் வகுப்புக்கு சென்றிருக்கவில்லையென்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மற்றொரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் சங்கீத ஆசிரியையின் தங்குமிடத்துக்கு சென்று அவருக்கு பாடத்தைப் பற்றி நினைவூட்டினர்.
இதன் காரணாமாகவே ஆத்திரமடைந்த ஆசிரியை பிரம்பு எடுத்து மாணவர்களை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அண்மைய காலங்களில் பாடசாலைகளில் பிள்ளைகள் ஆசிரியரிர்களால் துன்புறுத்தகளுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.