இசையமைப்பாளர் தேவா வீட்டில் மற்றுமொரு சோகம்; அடுத்தடுத்து துயரம்
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் மறைந்த இசை அமைப்பாளருமான சபேஷின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ், உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் (19 ) காலமானார்.
நடிகர் கார்த்திக் சபேஷ்,க்கு வயது 37. இசையமைப்பாளர் தேவா, கடந்த 17-ம் தேதி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் மறைந்த சோகத்திலிருந்து அவரது குடும்பம் மீள்வதற்குள் அவருடைய சகோதரர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாவின் தம்பி மகன் நடிகர் கார்த்திக் சபேஷ்
கார்த்திக் சபேஷ், வல்லவன், பட்டத்து யானை, உதயம் என்.எச்.4, பர்மா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். அவரது உடல், திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் நேற்று மாலை அவருடைய இறுதிச்சடங்கு நடை பெற்றது. மறைந்த கார்த்திக் சபேஷுக்கு ரம்யா என்ற மனைவியும், பிரிஷானிதாரா மற்றும் ஹைரானிதாரா என்ற 2 மகள்களும் உள்ளனர். அதேசமயம் கடந்த ஆண்டு அக்.23-ம் தேதி கார்த்திக் சபேஷின் தந்தையான இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.