ஈழத்தின் பிரசித்தி பெற்ற திருமுறிகண்டி ஆலயத்தின் பெருந்தன்மையான செயல்
ஈழத்தின் புகழ்பெற்ற திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய நிதியத்தினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ரூபா 4 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் செய்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலய சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களிற்கு மொத்தமாக ரூபா 4.08 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

4.08 மில்லியன் பெறுமதியான உலர் உணவு
பாதிக்கப்பட்ட மக்களின் துயரைத் துடைப்பதற்கான இவ்வுயரிய பங்களிப்பு, ஆலயத்தின் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த உலர் உணவு பொதிகள் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஈழத்தில் மிக பிரசித்தி பெற்ற திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஆடம்பரங்கள் எதுவுமின்றி இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும்.

அது மட்டும்ல்லாது அவ்வழியால் செல்லும் அனைத்து வாகனங்களுமே தரித்து நின்று திருமுறிகண்டி பிள்ளையாரை வணங்காது செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
