வீட்டிற்கு முன்னால் அரங்கேறிய படுகொலை ; வசமாக பிடிபட்ட இளைஞன்
மஹியங்கனை, அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 ஆம் திகதி இடம்பெற்ற இக் குற்றச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 ஆம் திகதி அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் வைத்து நபரைத் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுச் சந்தேகநபர் தப்பியோடியிருந்தார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.