சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை ; சகோதரர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
Attempted Murder
Sri Lanka Magistrate Court
Gun Shooting
By Sulokshi
தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களை நாளை (18) வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர், சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை சம்பவத்துக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குறித்த இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US