ஜேர்மனியில் மனைவி - மூன்று குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை! வெளியான அதிர்ச்சி காரணம்
போலியான கொரோனா தடுப்பூசி அட்டையை உருவாக்கியதால், ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று இளம் மகள்களைக் கொன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேர்மனியில் உள்ள வீடொன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஜேர்மனி தலைநகர் Berlin தெற்கே உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.

டெவிட் ஆர் என்ற 40 வயதுடைய நபர் ஒருவரே சனிக்கிழமையன்று பெர்லினின் தெற்கே உள்ள கொய்னிக்ஸ் வஸ்டர்ஹவுசனில் உள்ள அவர்களது வீட்டிற்குள் அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று பெண் குழந்தைகளை சேர்ந்து சுட்டுக் கொன்றுள்ளார்.
இதேவேளை, கொலைகள் இடம்பெற்ற போது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக் காரணமாக சுய தனிமையில் இருந்துள்ளனர் என்ற தகவலை ஜேர்மனிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
டெவிட் தனது மனைவிக்கு COVID தடுப்பூசி அட்டையை உருவாக்கியதை குறிப்பில் ஒப்புக்கொண்டார், ஆனால் அவரது முதலாளி பின்னர் அது போலியானது என்பதைக் கண்டுபிடித்து அதிகாரிகளை எச்சரிக்குமாறு மிரட்டினார்.

அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றும் அந்த நபர் அஞ்சினார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டில் ஆட்களின் நடமாட்டம் எதனையும் காணாததால் சந்தேகம் கொண்ட அயலவர் ஒருவர் ஜன்னல் வழியாக உள்ளே நோட்டமிட்டபோது வீட்டின் உள்ளே தரையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டு உடனடியாக பொலிலாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வீட்டுக்கு விரைந்து வந்த பொலிஸார், அங்கிருந்து வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. குழந்தைகள் படுக்கையில் வைத்து சுடப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, சடலங்களில் வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன. வீட்டுக்குள் வெளி நபர்கள் எவரும் நுழைந்தமைக்கான தடயங்கள் எதும் இல்லை பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் கைத் துப்பாக்கி வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் பெற்றிருந்தனரா என்பது தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல பக்கங்களிலான கடிதம் ஒன்றில் அந்தத் தந்தை தனது செயலுக்கான காரணத்தை எழுதியுள்ளார். போலிச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காகத் தாங்கள் சிறை செல்ல நேர்ந்தால் குழந்தைகள் தனித்துப் போய்விடுவார்கள். அதனைப் பொறுக்க முடியாததாலேயே முழுக் குடும்பத்தையும் கொன்று தனது வாழ்வை முடித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் எழுதியிருக்கின்றார்.
மேலும், சமூக நலசேவையாளர்களால் குழந்தைகள் தங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுவார்கள் என்று அஞ்சுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அமைதியாக வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த இந்த அவல முடிவு சுமார் மூவாயிரம் பேர் வசிக்கின்ற Senzig (Brandenburg)என்ற கிராமத்தைப் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.