கனேமுல்ல சஞ்சீவ கொலையில் திருப்பம்; பொலிஸ் அதிகாரி கைது
கொழும்பு நீதிமன்றத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி உரையாடல்
கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்
இலங்கையை உலுக்கிய கொலை; பெண்ணை கண்டுபிடிக்க உதவிகோரும் பொலிஸார்
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமைகோரிய நபர் இவர்தான்
அநாதையான கனேமுல்ல சஞ்சீவவின் சடலம்
தடுப்பு காவலில் கனேமுல்ல சஞ்சீவ சந்தேக நபர்கள்