சூதாட்டத்தால் இடம்பெற்ற படுகொலை ; சகோதரர்கள் இருவர் கைது
கல்கிஸ்ஸை - இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரொருவரை வெளியே இழுத்துச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நால்வர் கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கத்தி மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலைசெய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.