பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்; ஜக்மோகன் சிங் உருக்கம்
இலங்கையின் உள்ள்நாட்டுப்போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முள்ளைவாய்கால் பேரவலத்தை நினைவுகூரும் மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாலசந்திரன் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான்
பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன் தான். இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது, நான் அவரின் கதையை எழுதினேன்.
அவரை நேரடியாக பார்த்திராத போதிலும் நான் அவரை பற்றி எழுதினேன். தந்தையும் தாயும் எவ்வாறு சிந்திப்பார்கள் சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன். கைதுசெய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என எழுதினேன்.
ஆனால் இன்று பாலசந்திரன் எங்கிருக்கின்றார்.பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரினதும் உடலின் இடதுபக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.
பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான். இனப்படுகொலையின் காலடிச்சுவடுகள் என்ற இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கதையையும் மீண்டும் மீண்டு;ம் சொல்லவேண்டும்.