முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் வென்ற இலங்கை தமிழரசுக் கட்சி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.