முல்லைத்தீவு காவல் நிலையம் முன் எதிர்ப்பில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதிகள்!
அம்பாறையிலிருந்து முல்லைத்தீவிற்கு வரும் குறித்த தனியார் பேருந்துக்கு உரிய அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும், முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் சட்டவிரோத அனுமதியுடன் மாவட்டத்திற்குள் சேவையை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், குறித்த தனியார் பேருந்து இராணுவ வீரர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக பேருந்துகளை நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவுக்கு வரும் தனியார் பேருந்து தொடர்பில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத முல்லைத்தீவு பொலிஸாருக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு காவல் நிலையம் முன்பாக பேருந்துகளை நிறுத்தி அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.