குருந்தி விகாரை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் நிபுணர் வண. கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கு சொந்தமான காணிக்குள் தமிழ் மக்களைக் குடியேற்றப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மறுத்துள்ளார்.
ஹோமாகம பிரதேச செயலகத்தில் இன்று (15) மாலை நடைபெற்ற புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.