முல்லைத்தீவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு!
முல்லைத்தீவில் இன்று மாலை 5.30 மணிவரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இன்று(25) மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியினை சேர்ந்த 42 அகவையுடைய அப்துல் ரஹீம் ஜனுபா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்சியாக உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவில் ஒரேநாளில் அதிகளவான மரணங்கள் இன்று பதிவாகியுள்ளது.
மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதனை மக்கள் உதாசீனம் செய்து வருகின்றமை முல்லைத்தீவில் அவதானிக்க முடிகின்றது