சி.ஐ.டியிலிருந்து தனக்கு அழைப்பு வரும் ; முஜிபுர் ரஹ்மான்
சுங்கத்தின் எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாக்கு மூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறையினரால் தனக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக, விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை நான் சபையில் தாக்கல் செய்த பிறகு, கொள்கலன் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னை விசாரிக்க விரும்புகின்றனர் என கூறியுள்ளார்.
அத்தோடு தனது முகவரியை பாராளுமன்றத்தில் கேட்டதாகவும், அங்கு தனது முகவரி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.