யாழில் விபத்தில் சிக்கிய சிறீதரன் எம்.பியின் வாகனம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று (31) நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
குறித்த சிலை திறப்பு நிகழ்விற்கு சென்றுகொண்டிருந்த சிறீதரன் எம்பியின் வாகனம் புத்தூர் சந்தியில் விபத்துக்கு உள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் விபத்து
திடீர் என பாதையின் குறுக்கே மூன்று பேர் வந்த மோட்டார்சைக்கிள் எம்பியின் வாகனத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார்சைக்கிளில் வந்தவர்களுக்கு சிறு அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் எம்பியின் வாகனத்திலேயே அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறீதரன் எம்பியின் வாகனம் சிறிய அளவு சேதமானதாக தெரிவிக்கப்படுகின்றது.